Monday, June 2, 2014

பற்றற்று போய்விடுமெண்ணம் வந்தது
அதின் பற்றற்றுபோகதிருக்க
 பற்றற்ததை பற்றிபிடிக்க அங்கெற்றும் இங்கெற்றும் நோக்க
சுற்றும்  உற்றமும் சுற்ற நின்றது சற்று யோசிக்கையில்
கிஞ்சிற்றும் விசனமில்லாதற்றுபோகுமோ பற்று மனம்
எனும் கவலைபற்று வந்தது
ஒற்றைக்கு ஆக்காது எனை உற்றதாய் ஒன்றும் பெற்றதாய் ஒன்றும்
உடலது அற்றத்து சற்றும்விலக நிழல்போல சிறு கொற்றத்து துணையாய்
வற்றா ஊற்றாய்  நற்றத்து நல்கும் அன்பை எனக்கு பெற்றுதரும் உற்றவளும்
அவள் எனக்கு பெற்றதுகளும்
ஒட்டியதும் உடன்பிறந்ததும் கற்றதுமென சுற்றும் சூழவொரு பற்றே பறந்திருக்க
அற்றுப்போனது பற்றற்றுபோகும் ஆவல் பற்றற்று.

Saturday, May 31, 2014

உன் நினைவுகள்!


நீ இல்லை என்றொரு காலைபொழுது
மேகம் மறைத்ததா விழி நீர் மறைத்ததா
காலம் காலமாய் சேர்ந்துதானே இருந்தோம்
என் நினைவுகளில் தேக்கியதை
என் நெஞ்சில் நிறைந்ததை விழித்துபார்த்து அழிக்க
மனம் விழையவில்லை இரவில் கண்டதுபோல்
விழிக்குள்ளேயே தங்கிவிடு!

அறிவு


இருந்தது,இருப்பது தொடர்ந்து எப்போதுமேஇல்லாமல் இருந்த ஒன்று என்று தொடர,
எப்போதுமே இல்லாமலிருந்த ஒன்றா, அல்லது எப்போதுமே எதுவுமே இல்லாதிருந்ததொன்றா?
எதைகுறித்து ஆக்க இவ்வாக்கம்?
எப்போதும் இல்லாமலிருந்த ஒன்று என்பதுகுறித்தான அறிவு யாருக்கு இருந்திருக்கும்,அதுவே இல்லை என்னும்போது அதன் அடிப்படை, திட்டம், ஆக்கம், செயல், சாதக பாதக,  முடிவு என்று ஒன்றினுடையதுமான அறிவு எங்கனம் இருந்திருக்கமுடியும் அதுவே இல்லாமலிருக்கும்போது
அங்கெனமெனில் எப்போதும் இல்லாமலிருந்த ஒன்றினை குறித்தாக்கம், இருக்கும் அறிவு எனில் நான் ஏதுமில்லாதிருந்த நாளின் எல்லாமாய் இருந்திருக்கவேண்டும்
அங்கனம் இருந்திருப்பின், எல்லாவற்றின் இருந்ததும், இருப்பதும், எப்போதும் இல்லாமலிருந்ததும், என்னுடையதாய் இருந்திருக்கவேண்டும்
அங்கெனமெனில் எப்போதும் இல்லாமலிருந்ததின் எல்லா அறிவும் நானாகின் இருந்திருக்கின்றேன் இருக்கின்றேன் எப்போதும் இல்லாமலானதாகவும் இருந்திருக்கின்றேன்
ஆக இருந்ததின் இருப்பதின் இல்லாமலிருந்ததின் அறிவா நான் பின் ஏன் எல்லாம் குறித்தான ஆக்கம் எனக்கு நானே எல்லாமுவின் அறிவாயிருக்கும்போது, இருக்கமுடியாது ஆம் நான் இன்னும் தேவையுடையவாகவே என்னில் இருந்ததை இருப்பதை இல்லாமல் இருந்ததை ஏற்க்க எதிர்கொள்ள வேண்டியவனாகவே இருக்கின்றேன் ஆக ஆக்கமும் ஆகவும் இல்லை என்னால் என்பதையே ஆக்கங்கள் படிபிக்க படிக்க என்றே நான், நான் என்ற ஒன்றாக எதையும் மிகைக்க மேலான்மை இன்றியும் வகுத்து பெருக்கி கூட்டினாலும் கழிந்தே போகுபவனாகவே மிச்சமும் என் எச்சமும் என்ன என்கின்ற அறிவற்றே
 நான் வெரும் ஆக்கமே, இருக்கின்றேன், இருந்தேன் எங்கே என்ற அறிவின்றியே இதில் இல்லாமலிருந்ததென்பது எங்கிருந்து இல்லமல் போனபின் எங்கே என்பது எங்கிருந்து.
பின், எப்பவுமே எதுவுமே இல்லாதிருந்த ஒன்று எது?

ஆக்கம்

.
இருந்ததை தொடர்ந்து,
இருப்பது,
ஆம், இருந்ததை தொடர்ந்துதான் இருப்பதும் எதில் எதையாக்க  கூட்டலா, கழித்தலா .வகுத்தலா இருந்ததில் வகுத்ததில்தான் பெருகியதுதான் இந்த கூட்டல் அதிலிருந்து எது, கழித்தல் என்பதுகூட இயலாது தானே கழிந்துபோகின்றது
ஒன்று இருந்ததால் அதிலிருந்துதான் இப்போது இருப்பது, இதில் எங்கிருந்து ஆக்கம் இருந்த ஒன்றிலிருந்து ஆனது இந்த இருப்பது, அதில் நான் என்ன ஆக்க. நானே இருந்ததின் ஆக்கம்தான் நான் இல்லை என்றால் இன்னொன்று ஆகியிருக்கும்
இருந்ததை தொடர்ந்து, இருப்பதும் அதில் வகுத்தலும் கூட்டலுமாகி கழிந்துபோகும் ஆக்கமென்பது எனில் என்னால் என்பதும் இல்லாதுபோகும்.

Friday, May 30, 2014

அறிமுகம்


ஆக்கம் என்பது குறித்தான ஒரு ஆக்கத்தினையாக்க  இது ஒரு முயற்சியாக்கம்
ஆக்கம் என்பது புதிதாய் என்னைகொண்டு ஒன்றா, அப்படி ஒன்றையாக்க என்னால் இயலுமா , அங்கனம் எனில் நான் படைப்பவனா, எதை, எதிலிருந்து, ஏன், யாருக்கு என்ற எண்ண
ற்ற கேள்விகள் எழுவதை தவிர்க்க இயலவில்லை, இயலாத ஒருவனால் எதையேனும் ஆக்க இயலுமா,ஆக்கத்தில் கேள்விகளா ஆக்குவதில் கேள்விகளா ஆனபின் கேள்விகளா என்றே கேள்விகள் தொடர்கின்றன
முதலில் எதையாக்க என்ற கேள்வி, இருந்ததையா இருப்பதையா அல்லது எப்போதுமே இல்லாதிருந்த ஒன்றையா,
இருந்ததை என்றால், அது இருந்தபோது நான் இருந்தேனா, இருந்திருந்தால் இருந்ததில் இருந்து எதையாக்க,அதிலிருந்து எதையேனும் ஆக்க என்றால் இருந்தது என்னால் மீண்டுமாக்க இடம்கொடுக்குமெனில் அது முற்றானது அல்ல, முற்றானதை முழுமையாக்க, முயற்சித்தவன் ஏன் அங்கனம் இடம் விட்டுசென்றான் என்ற அறிவுகொண்டுவேண்டும் மீண்டும் முழுமையாக்க. முழுமையற்று இருக்கின்றது என்ற அறிவு அது முழுமையானதாய் இருக்க இப்படித்தான் ஆகி இருக்கவேண்டும் என்ற முற்றம்வேண்டும், அது  சரி என்றால் இருந்ததை ஆக்கியவன் எந்த அறிவில் அதை ஆக்கினான் என்ற கேள்வி தொக்கி நிற்க்கும், இருந்ததையாக்கவேண்டுமெனில் இருந்ததில் முழுமையாக்க என்னவேண்டுமென்ற அறிவும்,அங்கனம் இருக்க ஆக்கியவன் என் அங்கனம் விட்டானென்ற அறிவும் முழுமையாக்கினால் ஆக்கியவன் முன்னமே ஆக்கியதினும் மேலாக்கவேண்டுமென்ற அறிவும் அங்கனம் ஆக்கம் முழுமைபெற்றால் அது இருந்தது அல்ல இது வேறானது என்ற அறிவும் வரும் ஆக இருந்ததை ஆக்க இயாலாது என்றும் வரும்.
இருப்பது........