பற்றற்று போய்விடுமெண்ணம் வந்தது
அதின் பற்றற்றுபோகதிருக்க
பற்றற்ததை பற்றிபிடிக்க அங்கெற்றும் இங்கெற்றும் நோக்க
சுற்றும் உற்றமும் சுற்ற நின்றது சற்று யோசிக்கையில்
கிஞ்சிற்றும் விசனமில்லாதற்றுபோகுமோ பற்று மனம்
எனும் கவலைபற்று வந்தது
ஒற்றைக்கு ஆக்காது எனை உற்றதாய் ஒன்றும் பெற்றதாய் ஒன்றும்
உடலது அற்றத்து சற்றும்விலக நிழல்போல சிறு கொற்றத்து துணையாய்
வற்றா ஊற்றாய் நற்றத்து நல்கும் அன்பை எனக்கு பெற்றுதரும் உற்றவளும்
அவள் எனக்கு பெற்றதுகளும்
ஒட்டியதும் உடன்பிறந்ததும் கற்றதுமென சுற்றும் சூழவொரு பற்றே பறந்திருக்க
அற்றுப்போனது பற்றற்றுபோகும் ஆவல் பற்றற்று.
No comments:
Post a Comment