Saturday, May 31, 2014
அறிவு
இருந்தது,இருப்பது தொடர்ந்து எப்போதுமேஇல்லாமல் இருந்த ஒன்று என்று தொடர,
எப்போதுமே இல்லாமலிருந்த ஒன்றா, அல்லது எப்போதுமே எதுவுமே இல்லாதிருந்ததொன்றா?
எதைகுறித்து ஆக்க இவ்வாக்கம்?
எப்போதும் இல்லாமலிருந்த ஒன்று என்பதுகுறித்தான அறிவு யாருக்கு இருந்திருக்கும்,அதுவே இல்லை என்னும்போது அதன் அடிப்படை, திட்டம், ஆக்கம், செயல், சாதக பாதக, முடிவு என்று ஒன்றினுடையதுமான அறிவு எங்கனம் இருந்திருக்கமுடியும் அதுவே இல்லாமலிருக்கும்போது
அங்கெனமெனில் எப்போதும் இல்லாமலிருந்த ஒன்றினை குறித்தாக்கம், இருக்கும் அறிவு எனில் நான் ஏதுமில்லாதிருந்த நாளின் எல்லாமாய் இருந்திருக்கவேண்டும்
அங்கனம் இருந்திருப்பின், எல்லாவற்றின் இருந்ததும், இருப்பதும், எப்போதும் இல்லாமலிருந்ததும், என்னுடையதாய் இருந்திருக்கவேண்டும்
அங்கெனமெனில் எப்போதும் இல்லாமலிருந்ததின் எல்லா அறிவும் நானாகின் இருந்திருக்கின்றேன் இருக்கின்றேன் எப்போதும் இல்லாமலானதாகவும் இருந்திருக்கின்றேன்
ஆக இருந்ததின் இருப்பதின் இல்லாமலிருந்ததின் அறிவா நான் பின் ஏன் எல்லாம் குறித்தான ஆக்கம் எனக்கு நானே எல்லாமுவின் அறிவாயிருக்கும்போது, இருக்கமுடியாது ஆம் நான் இன்னும் தேவையுடையவாகவே என்னில் இருந்ததை இருப்பதை இல்லாமல் இருந்ததை ஏற்க்க எதிர்கொள்ள வேண்டியவனாகவே இருக்கின்றேன் ஆக ஆக்கமும் ஆகவும் இல்லை என்னால் என்பதையே ஆக்கங்கள் படிபிக்க படிக்க என்றே நான், நான் என்ற ஒன்றாக எதையும் மிகைக்க மேலான்மை இன்றியும் வகுத்து பெருக்கி கூட்டினாலும் கழிந்தே போகுபவனாகவே மிச்சமும் என் எச்சமும் என்ன என்கின்ற அறிவற்றே
நான் வெரும் ஆக்கமே, இருக்கின்றேன், இருந்தேன் எங்கே என்ற அறிவின்றியே இதில் இல்லாமலிருந்ததென்பது எங்கிருந்து இல்லமல் போனபின் எங்கே என்பது எங்கிருந்து.
பின், எப்பவுமே எதுவுமே இல்லாதிருந்த ஒன்று எது?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment